Friday, June 19, 2020

பேட்லட்

வகுப்பறையில் ஊடாடும் கற்பித்தல் முறையில் பயன்படுத்தப்படும் ஒரு கருவி 'பேட்லட்.' 'பேட்லட்' என்பது ஒரு வலைத்தளம். மெய்நிகர் கற்றலில் இந்த வலைதளம் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, கான்செப்ட் ரொம்ப எளிது. 'பேட்'  (Pad) என்றால் எழுத உதவும் பொருள். 'பேட்லட்' (Padlet) என்பது குட்டிக் கருவி. இதை மெய்நிகர் முறையில் பயன்படுத்தவில்லை என்றாலும், நாம் சார்ட் பேப்பர் கொண்டும் பயன்படுத்தலாம்.

இக்கற்பித்தல் முறையில் நிறைய 'சார்ட்' வகைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை இங்கே காண்போம்:

ஆங்க்கர் சார்ட்ஸ் (Anchor Charts)

பாடம் தொடர்பான தரவுகளையும் பதிவுகளையும் வகுப்பறை முழுவதும் தொங்க விடுவது. இவற்றைக் காண்பதால் மாணவர்கள் தங்களுடைய பாடம் தொடர்பான ஐயங்களைத் தாங்களே வாசித்துக் களைந்துகொள்வர். மேலும், அவர்கள் தங்களுடைய கருத்துக்களை மேம்படுத்தவும், ஒருவர் மற்றவரோடு கருத்துக்களை விவாதிக்கவும் அவர்களால் இயலும். ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்தே இதை உருவாக்கலாம்.

எடுத்துக்காட்டாக, உயிரியில் பாடத்தில் 'நரம்பியல் அமைப்பு' என்னும் தலைப்பைப் படிக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். மனித உடல், நரம்புத் தொகுப்பு, நரம்பு அமைப்பு, நரம்புகளின் இயக்கம் என பல சார்ட்களை உருவாக்கி, அந்தப் பாடம் முடியும் வரை, அல்லது முடிந்த பின்னும் வகுப்பில் தொங்கவிடலாம்.

இவற்றின் வழியாக மாணவர்களின் படைப்பாற்றல் வளரும்.

மாணவர்கள் புதிய கருத்துக்களைத் தெரிந்து கொள்வதோடு, தாங்கள் ஏற்கெனவே கற்றதோடு தங்கள் கற்றலை இணைத்துப் பார்ப்பர்.

தாங்கள் கற்கும் பாடங்களை எளிதில் மனதில் பதித்துக்கொள்வர்.

செய்வதற்கு அதிக நேரம் ஆகும், மற்றும் பொருள்செலவும் உண்டு - இவைதான் இந்த முறையின் பின்னடைவுகள்.